சர்வதேச தொற்றாக மாறியுள்ள கொரோனா 19, மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அனைத்து நாடுகளும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தியா இரண்டாவது அலையில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளது. படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள், ஆள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன், மருந்துகள் தட்டுப்பாட்டில் தவித்து வருகிறது.